2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், தான் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.