தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இன்று தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக அதிமுக சந்திக்க இருந்த நிலையில் அதற்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தேமுதிக அதிருப்தி அளித்துள்ளது. மேலும் பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட தங்களுக்கு கொடுக்கவில்லை என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்த தேமுதிக கட்சி மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.