அகஸ்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே நான்கு யானைகள் காப்பாக்கப் பகுதிகள் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அகஸ்திய மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அகத்திய மலையில் 1197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.