ஜம்மு காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சுரி-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது.
ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அதே போல ஸ்ரீ நகருக்கு செல்ல முற்பட்ட இடதுசாரி இயக்க தலைவர்களான சீத்தாராம் யெச்சுரி மற்றும் ராஜா தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது , இந்திய குடிமக்கள் இந்தியாவில் எங்கு சென்று வேண்டும் என்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்திய அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்து த்தாராம் யெச்சுரி ஸ்ரீநகரில் செல்லலாம் , அங்கேயுள்ள தங்கள் கட்சி உறவினர்களை சந்திக்கலாம் , ஆனால் அரசியல் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்துள்ளது.