சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சக பெண் நிர்வாகி டெய்சியை ஆபாசமாக பேசிய புகாரில் சூர்யா பாஜகவில் சஸ்பென்ஸ்ட் ஏற்பட்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாஜக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனை சிவா தரக்குறைவாக பேசியுள்ளார்.
முன்னதாக 10 நாட்களுக்கு சூர்யா சிவா கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை சூர்யா சிவா ஒப்புக்கொண்டார் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.