Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: தி.க – இந்துமுன்னணி மாறிமாறி தாக்குதல் – பெரும் பரபரப்பு …!!

திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும்,  பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில்  நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள்  என்றும்,  எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம  சாஸ்திரத்தை  கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கையில் இருந்த மனுதர்மம் புத்தகத்தை தீயிட்டு கொளுத்தினர். அப்போது போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை கைது செய்ய முயலும் போது, போராட்டக்காரர்களுக்கும் – போலீசுக்கும் லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது திடீரென்று இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்குஉடனடியாக வந்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தந்தை பெரியார் திராவிட கழகத்தனரும், இந்து முன்னணியினரும் கற்களாலும், செருப்பாலும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சிகளில் போலீஸ் ஈடுபட்டும், இருவரும்  தாங்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் எந்த ஒரு போராட்டம் நடந்தாலும். இதுபோன்று சம்பவங்கள் நடந்ததில்லை. போராட்டத்தில் இப்படி மோதல் நடப்பது இதுதான் முதல் தடவை என்பதால் இந்த சம்பவம்  புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |