தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தார். இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது, தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர், மருத்துவத் துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.