தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளரும் கட்டணம் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ ஆணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்றுத் திறன் உடையவர்களின் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் உதவியாளர்கள் ஒருவர் பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களது அட்டையை காண்பித்து விட்டு பயணம் செய்யலாம் என்று அறிவிப்பை இந்த அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது.