Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக 59 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.  தற்போது புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

அது என்னவென்றால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில பேரிடர் நிதியிலிருந்து 14 மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி என மொத்தம் ரூ. 59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |