தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் வருகின்ற ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டபேரவை எத்தனை நாட்கள் கூட்டப்படும் என்பதை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றுவார். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து காலை 10 மணிக்கு மாண்புமிகு ஆளுநர் உரையை நிகழ்த்துவதற்கும், வருகை தரவும் இசைவு தெரிவித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.