Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். 90 தொகுதி கொண்ட அரியானாவில் 1.82 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.

இரண்டு மாநில சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்கள் 28 லட்சம் வரை பிரச்சாரத்திற்கு செலவிடலாம்.மகராஷ்டிரா விற்கு 2 சிறப்பு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக்_கை பயன்படுத்த வேண்டாம். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்குகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி செய்யப்படும். மஹாராஷ்டிரா மற்றும் ஹரியாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.

இரண்டு மாநிலங்களுக்கும் அக்டோபர் 21_ஆம் தேர்தல் நடத்தப்படும். வாக்குப்பதிவு நடைபெற்று இரண்டு நாட்களில் அக்டோபர் 24_ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.செப்டம்பர் 27 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதே போல தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பையும் சுனில் அரோரா வெளியிட்டார். அதில் விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21_ஆம் தேதி நடைபெறுமென்றும் , அதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதி நடைபெறுமென்றும் தெரிவித்தார்.

Categories

Tech |