சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி தருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை காணப்பட வேண்டும். இல்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு எச்சரித்து இருக்கிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும் போது நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என நீதிபதிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
Categories