தீரன் பட பாணியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்ட்டில் தீரன் பட பாணியில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்று விட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த என்கவுண்டரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.