தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பேருக்கும், திருவள்ளூர் – 21, திருநெல்வேலி – 22 பேர், காஞ்சிபுரம் – 11, தூத்துக்குடி – 10, மதுரை – 11, தேனி – 6, திருவண்ணாமலை – 4, கடலூர் -3, கன்னியாகுமரி -4, பெரம்பலூர் – 2, ராணிப்பேட்டை – 2, தென்காசி – 2, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் – தலா ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து ஒருவர், மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களில் 40 பேர், மாலத்தீவில் இருந்து வந்த 6 பேர், குஜராத்தில் இருந்து வந்தவர்கள் – 2 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 58 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் 38 அரசு மையங்கள் மற்றும் 20 தனியார் மையங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2,90,906 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.