கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
உறவினர்களின் புகாரையடுத்து கேரளா போலீஸ் இருப்பிடத்தை தேடி மிகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் தற்போது இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. போலீசார் நடத்த்திய தீவிர விசாரணையில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது அம்பலமாகி இருக்கிறது.
கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்று வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்து இருப்பது அம்பலமாக இருக்கிறது. பணக்காரர்களாக வேண்டும் என்பதற்காக இரண்டு பெண்களையும் ஏமாற்றி லைலா தம்பதி நரபலி கொடுத்திருக்கிறார்கள். இரண்டு பெண்களையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போலீசாரின் பல்வேறு கட்ட விசாரணையில் பல தடுக்கப்படும் தகவல்கள் வெளியாகி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்வெளியாகி இருக்கிறது.