மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் தொ. பரமசிவன் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன்(75). இவர் நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர் ஆவார். மேலும் இவர் “திராவிடம்” எனும் சிந்தனை எப்படி நம் தமிழ் மண்ணில் உருவானது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
பிரபல எழுத்தாளரும்,இந்நிலையில் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் தொ பரமசிவன் இன்று காலமானார். இவர் அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், இன்றைய ஜனநாயகம் குறித்த முக்கிய வரலாற்று நூல்களை எழுதியவர். ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே சென்று இவர் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.