அஞ்சல் துறை தேர்வு இனி தமிழில் எழுதலாம் என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
தமிழகத்தில் அஞ்சல் துறை தேர்வு தமிழில் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது சமீபத்தில் ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் தேர்வு எழுத அறிவிப்பாணை வெளியிட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் தேர்வு எழுத அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அவருக்கு பதில் அளித்துள்ளது.