கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை வைரஸ் ஒன்று பரவியதை சீனா உறுதி செய்தது.
சீனாவில் இதுவரை 3000 பேர் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஊடகங்களில் சீனாவின் வெகுவிரைவில் சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை என தமிழக மாணவர்கள் திரும்ப வாய்ப்பு உள்ளது.
சுகாதாரத் துறையை பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் அங்குள்ள தமிழர்கள் உணவின்றி தனிமைப்படுவார்கள். எனவே சீனாவில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாகவும் , வைரஸால் தாக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி , ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய மாநில அரசுகள் பதில்மனு அளிக்க உத்தரவிட்டு வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.