தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக், கிளப் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக தற்போது பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக், தனியார் பார்கள், கிளப், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.