தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடி மது விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பையும் நேற்று காலை வெளியிட்டது. இந்த ஊரடங்கு காரணமாக நேற்று மற்றும் இன்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து கடைகள் திறந்திருக்கும் என்றும், மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறும் தமிழக அரசு கூறியிருந்தது.
இதில் டாஸ்மாக் கடைகளும் அடங்கும். அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ . 426.24 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. ஊரடங்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல் ஆக உள்ள நிலையில் சென்னையில் மட்டும் ரூ.10.43 கோடிக்கும், மதுரையில் ரூ. 87.28 கோடிக்கும், திருச்சியில் ரூ.82.59 கோடிக்கும், சேலத்தில் ரூ. 79.82 கோடிக்கும், கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.