துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.
இது பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து பெரியாரிய அமைப்புகள், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் இல்லாத ஒன்றை கூறவில்லை என்று கூறி ஆதாரத்தையும் காட்டினார். மேலும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக அவர் கூறினார்.