தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது.
டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றனர். சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,
கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.11 மீட்டர் நீளமும், 90 சென்டிமீட்டர் உயரத்தில் தரைத்தளமும் கொண்ட வகையில் 1107 பேருந்துகளை வாங்க முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.