நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி இளம்தரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரனை நடத்தி இருக்கிறது. அவர்களே விசாரணைக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஆர்எஸ் பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரபட்டது .
இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. தற்பொழுது விஜிலென்ஸ் கமிஷனரின் அறிக்கைக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும், அவர் முன்னிலையில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில், விஜிலென்ஸ் கமிஷனர் முன்பாக தன் மீதான புகார் நிலுவையில் விசாரணைக்கு இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு விசாரணை செப்டம்பர் 26ம் தேதி வைத்தும், பதில் மனு தாக்கல் செய்த அரசு தரப்புக்கு உத்தரவிட்டும், வழக்கை தள்ளி வைத்திருக்கிறார்.