Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் செயல்…. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருங்கட்டூர் கிராமத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள சமையல் அறையின் மேற்கூரையில் சிமெண்ட் சீட் அமைந்துள்ளது. அதனை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் ஜெயவேல் என்பவரின் வீட்டிலும் 7½ பவுன் தங்கம் மற்றும் 5 கிராம் வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் இருவரின் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. அதன் பிறகு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளிடமிருந்து 15 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்ததோடு கைது செய்துள்ளனர்.

Categories

Tech |