Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட , ஒன்றியங்களில் வீறுநடை போடும் திமுக …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட , ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக , அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்ற நிலையில் இன்று காலை முதல்  திமுக முன்னிலையில் இருந்து வருவதால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி களிப்பில் இருந்து வருகின்றனர்.

முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 201 1,770
அதிமுக 185 1521
பாஜக 4 77
பாமக 9 93
தேமுதிக 3 73
இதர 6
திமுக கூட்டணி 221 1978
திமுக 206 1760
காங்கிரஸ் 6 108
இ.கம்யூ 6 71
மா. கம்யூ 2 19
விசிக 6
மதிமுக 1 15
இதர
அமமுக 57
நாம் தமிழர் 1
சுயேச்சை 1 401

Categories

Tech |