பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உயிரிழந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பம்மல் கே சம்பந்தம், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 97. ஏற்கனவே அவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் திடீரென்று மரணம் அடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.