நிவர் புயல் இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் தற்போது தீவிர புயலாக தென்மேற்கு வங்கக்கடலில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்ந்து இன்று நண்பர்களுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இது மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையை கடக்க கூடும்.
கரைகின்ற சமயத்தில் பலத்த காற்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். இந்த பலத்த காற்றால் புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், ஏனைய அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் கரையை கிடைக்கின்ற சமயங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடல் நிலையைப் பொறுத்தவரை: கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடரும். தற்போது வரை பதிவான மழையின் அளவு படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர், மீனம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.