Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் மதில் சுவர் ஏறி  வந்த மர்ம நபர்கள், மேலே இருந்த அறை கதவை உடைத்து அங்குள்ள பீரோவை உடைத்து பார்த்தபோது அங்கு பீரோவில் பணம்,  நகை மற்றும் முக்கிய பொருட்கள் ஏதும் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளைக்காரர்கள், அங்கு இருந்த 54 இன்ச் டிவியை எடுத்துச் சென்று தப்பி சென்றுள்ளனர்.

பண்ணை வீட்டில் காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் பார்த்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து பெரிய குளம் பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகிறார்கள். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |