தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு இருந்ததால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. ஆனால் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்கு குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கும். பார்கள் திறப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.