போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது.
காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ட்வீட்_டர் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இது போன்ற பல பேக் நியூஸ் பாகிஸ்தானில் இருந்து பரப்புவது உறுதி செய்யப்பட்ட பிறகு கணக்குகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.இதை தவிர உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் கணக்கு நீக்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு அமைக்கப்படுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.