நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற புகாரையடுத்து AGS நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
காலை முதல் தொடங்கிய இந்த சோதனை AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருந்த நடிகர் விஜயை விசாரிக்க அதிகாரிகள் சென்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கு விஜய் யிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு படப்பிடிப்பும் நிறுத்தபட்டது. இதையடுத்து விஜயை சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். அதே நேரம் நடிகர் விஜய்யின் சாலிகிராமம் , நீலாங்கரை இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் வருமானவரித்துறையினர் நடிகர் விஜய் யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.