Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளுக்கு நேர கட்டுப்பாடு ….!!

அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று  பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல் இருக்கக் கூடிய நிலையில் தற்போது காய்கறி, மளிகை கடைகளில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி அங்காடிகளுக்கு வெளி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்கள் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்தப்பட்டுத்த என்று அரசு விளக்கியுள்ளது.

அதே போல பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30மணி வரை செயல்பட வேண்டும். மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் செயல்படலாம் என்றும், இயங்குவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள தமிழக அரசு சிற்றுண்டி உணவகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சிற்றுண்டிகள் காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரையும்,  மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும்,  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடி வருகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நேரக் கட்டுப்பாடு என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |