தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.