Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC முறைகேடு – ”சிபிஐ விசாரணை” பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு ….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் , மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017- 18 ஆண்டில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வழக்கில் சென்னை சேர்ந்த கவிதா என்பவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தபோது அவருடைய மனுவில் இந்த வழக்கு தொடர்புடைய வேறு சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதேபோல் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக விசரனை நடைபெற்றுள்ளது.

இதேபோல 2000 – 2001 ஆம் ஆண்டில் குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் 83 பேரை நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.இதேபோல முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டபோது கணக்கில் வராத பணம் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழகத்தின் எதிர்கால இளைஞர்கள் போட்டித் தேர்வு எழுதி அரசு பணிக்கு வருவதையும் , அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு டிஎன்பிஎஸ்சி  முறைகேடு நியாயமாக நடைபெற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் துரைசாமி , ரவிந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது , தமிழக தலைமைச் செயலாளர் , டிஎன்பிஎஸ்சி தலைவர் , சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

 

Categories

Tech |