TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? என்றும் ,
டிஎன்பிஎஸ்சி முறைகேடு எப்படி நடைபெற்றது ? என்றும் பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் நடத்தி வருகின்றார்.குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான விஷயங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் ஆலோசனைக்குப் பிறகு முக்கியமான முடிவு எடுப்பதாக கருதப்படுகிறது.இந்த தேர்வை ரத்து செய்து விடலாமா என்ற யோசனையும் அரசுக்கு இருப்பதாக தெரிகிறது இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கியமான முடிவு எடுப்பதாக கருதப்படுகிறது .