Categories
உலக செய்திகள் சற்றுமுன் விளையாட்டு

BREAKING : டோக்கியோ ”ஒலிம்பிக் போட்டிகள்”ஒத்திவைப்பு …!!

ஜப்பானின் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்தது. உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு வீரர்களை ஜப்பானில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.

கொரோனா அச்சுறுத்தல்காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றுக் கொண்டு ஓராண்டு ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |