இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
Categories