தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏற்கனவே இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Categories