கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் 3 மாதகாலத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னையில் அதிக அளவில் ஏற்பட்டு வந்த தொற்றானது தற்போது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று மாதத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடங்கள்: 100
சம்பளம்: ரூ. 12,000
கல்வித்தகுதி: பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்
விருப்பமுள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்திற்கு சான்றிதழ்கள், அடையாள அட்டையுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.