சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடியிடம் வழங்கப்படுவதால் இன்றிலிருந்து இந்த வலக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த இருக்கின்றது. இன்று வாங்கப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு நாளை காலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து இந்த விசாரணை தொடங்கப்படும் என்று டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல கோவில்பட்டி சிறை, அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் பகுதியில் எந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு என அனைத்திலும் இந்த அடுத்தடுத்து விசாரணைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.