போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடலூர் , திருப்பூரில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.