Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”சிக்கிய ப.சிதம்பரம்” CBI , அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.

Image result for p.chidambaram

இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது.

Image result for p.chidambaram

இந்நிலையில் தீடிர் திருப்பமாக டெல்லியில் இருக்கும் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர்.முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் ஒரு குழு_வாக இரவே சென்றது தேசிய அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.இது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Categories

Tech |