எங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டுமென்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி பேரூராட்சியில் உள்ள சுமார் 113 கிராம மக்கள் எங்களை தேவேந்திரகுள வேளாளர் என்று அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.மேலும் நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போகின்றோம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களிடம் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவாரத்தை நடத்தியும் அதில் எந்த பயனும் இல்லாமல் இருந்து.
இந்நிலையில் இன்று நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அறிவிக்க வேண்டுமென போராட்டம் நடத்திய 113 கிராமனைகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் எண்ணிக்கை மந்தமாகவே உள்ளத்து. அங்குள்ள 220_ஆவது வாக்குசாவடியில் இதுவரை வெறும் 44 வாக்குகள் தான் பதிவாகியுள்ளது.இங்கு 969 வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.