ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 51 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் ஒரு நபர் செல்லும் அளவில் 100 அடிக்கு கீழ் ராட்சச கிணறு அமைத்து அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ரிக் இயந்திரத்தின் மூலம் இன்று காலை 7 மணி முதல் சுமார் 14 மணி நேரமாக பல்வேறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 35 அடி வரை தோண்டப்பட்டது. மேலும் அதிகமான பாறை இருப்பதால் மிகவும் மிகவும் தொய்வு ஏற்பட்டதையடுத்து இதைவிட 3 மடங்கு சக்தி வாய்ந்த மற்றொரு ரிக் இயந்திரம் வரவைக்கப்பட்டது. இந்நிலையில் தீடிரென முதல் ரிக் இயந்திரம் பழுதாகியுள்ளது. இதை சரிசெய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.