புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரை பல்வேறு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படும்.
புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகளையும் சேர்த்து 2022 ஐபிஎல்லில் 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குஜராத் மற்றும் கேரளா அணிகளாக அவை இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.