சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ் பவனில் சரியாக 9:30 மணி அளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வருகிறார். அழைப்பிதழ் இல்லாத எவரும் ராஜ்பவனிற்கு உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. ராஜபாவன் முழுக்க காவல்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளே வரக்கூடிய அனைத்து நபர்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அதற்கு பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள்.
பாமாகவே சார்பிலே சட்டமன்ற குழு தலைவரும், கட்சியின் கவுரவ தலைவராக இருக்கக்கூடிய ஜிகே மணி வந்துள்ளார். அதேபோல திமுகவினுடைய கூட்டணி கட்சியைச் சார்ந்த பல எம்எல்ஏக்களும் வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்றவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.
சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெறும். தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இருக்கக்கூடிய நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறுகின்றது. 35 வது நபராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்