Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர் நிலவரம்… திமுக 2,318, அதிமுக 2,179..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் திமுக, அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்ற நிலையில் இன்று காலை முதல்  திமுக முன்னிலை வகித்து வந்தது.  இதையடுத்து அதிமுகவால் திமுகவை முந்த முடியவில்லை. தற்போது மதியமும் தொடர்ந்து திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் சில இடங்களே உள்ளதால் திமுக தான் வெல்லப்போகிறது என்பது தெரிகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

முன்னிலை நிலவரம்..!

ஒன்றிய கவுன்சிலர் –  5014/5067

திமுக+ – 2,318

அதிமுக+ – 2,179

அமமுக – 95

பிற கட்சிகள் – 437

நாம் தமிழர் – 01

Categories

Tech |