வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார்.
சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்திற்கான கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் சூர்யாவுக்கு உகந்ததாக இல்லை என்று ஐயம் கொண்டதால் சூர்யா விலகிருப்பதாக இயக்குனர் பாலா தெரிவித்திருக்கிறார்.