சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு ஆட்சபனை தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, அந்த வழக்கு வரும் 14ம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் எஸ்.பி வேலுமணி தொடர்ந்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு தற்போது விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர்நீதிமன்றம் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்றும், வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்பொழுது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும், பிறப்பிக்கும் உத்தரவுகள் குறித்து அடுத்த வாரம் இந்த விசாரணையை மேற்கொள்வதாக தான் தெரிவித்திருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இறுதித் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதுவரை எஸ்பி வேலுமணி மீதான இரு வழக்குகளில் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை நீட்டித்து தலைமை நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்துஇருக்கிறது