Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னதாக ஒன்றாம் தேதியை குறிப்பிட்டு சொல்லப்பட்டது, ஐந்தாம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று… இந்த நிலையில்அடுத்த  5 நாட்களுக்கு,  அதாவது இப்போது குறிப்பிட்டு சொல்லும் படி பார்த்தபோது ஆறாம் தேதி வரை தொடர்ச்சியாக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர், ஒரு விஷயம் பதிவு செய்திருந்தார்கள். 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை பொழிவு இருந்திருக்கிறது என்று  குறிப்பிடப்பட்டடிருந்தார்.  அதன் தொடர்ச்சியாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |